காங்கிரஸ் கட்சியில் ‘மேட்டுக்குடி கலாச்சாரம்’ விரவிக் கிடக்கிறது: சந்தீப் திக்‌ஷித்

காங்கிரஸ் கட்சியில் ‘மேட்டுக்குடி கலாச்சாரம்’ விரவிக் கிடக்கிறது: சந்தீப் திக்‌ஷித்
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியில் மேட்டுக்குடி கலாச்சாரம் விரவிக் கிடக்கிறது என்று முன்னாள் எம்.பி.யும் முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா திக்‌ஷித்தின் மகனுமான சந்தீப் திக்‌ஷித் சாடியுள்ளார்.

"காங்கிரஸ் கட்சியில் உள்ள 50%, என்.எஸ்.யு,ஐ. மற்றும் இளையோர் காங்கிரஸில் உள்ள 70% தூர்ந்து போன மரமாகிவிட்டனர்.

காங்கிரஸ் கட்சியில் மேட்டுக்குடி கலாச்சாரம் விரவிக் கிடக்கிறது. அங்கிருந்துதான் அகந்தையும், இறுமாப்பும் வளர்கிறது. நம் கட்சிக்காரர்கள் இம்மாதிரியான சூழ்நிலைகளில் அசவுகரியமாக உணர்கின்றனர்.

உட்கட்சித் தேர்தலை நடத்தி விட்டால் ஜனநாயகம் கடைபிடிக்கப்பட்டு விட்டது என்று அர்த்தமா? ஜனநாயகம் என்பது கருத்துகளில் தொடங்குகிறது, தலைவர்களை வழிநடத்த அனுமதிப்பது மற்றும் செயல் என்பதே ஜனநாயகம்.

காங்கிரஸ் கட்சிக்குள் புதியவர்களை கொண்டு வர வேண்டும்.” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in