Published : 24 Feb 2015 06:29 PM
Last Updated : 24 Feb 2015 06:29 PM
ராஜமெளலி இயக்கத்தில் தயாராகி வரும் 'பாஹுபலி' திரைப்படத்தை மே 22ம் தேதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்து வரும் 'பாஹுபலி' படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ராஜமெளலி. கீரவாணி இசையமைத்து வரும் இப்படத்தை அர்கா மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.
தெலுங்கு திரையுலகில் தயாரான படங்களுள் அதிக பொருட்செலவில் தயாராகி வரும் படம் 'பாஹுபலி' என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
"படத்தை மே 22ம் தேதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் மிக அதிகமான திரையரங்குகளில் வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது" என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
'பாஹுபலி' திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட இருக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் தயாராகி வருகிறது. தமிழுக்கு 'மகாபலி' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.