

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்ததாவது, "சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை மக்களுக்கு எனது சுதந்திர தின வாழ்த்துகள். நாம் பகிர்ந்து கொள்ளும் வரலாறு, கலாச்சாரம் நம்பிக்கை ஆகியவற்றை தகர்க்க முடியாது. வரும் ஆண்டுகளில் இலங்கை வளர்ச்சி அடைய எனது நல்வாழ்த்துகள்.
இம்மாதம் இலங்கை அதிபர் சிறிசேனாவை வரவேற்க நான் ஆர்வமாக உள்ளேன்" என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.