

தொலைக்காட்சியில் `ஏஐபி நாக்அவுட்’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் செயல்பட்ட தாகப் நடிகை தீபிகா படுகோனே உட்பட 14 பாலிவுட் பிரபலங்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேற்கத்திய நாடுகளில் `ரோஸ்ட்டடு’ என்ற பெயரில் ஒருவரை ஒருவர் வறுத்தெ டுக்கும் நிகழ்ச்சி நடத்தப்படு கிறது. இதில் ஒருவரை ஒருவர் எவ்வளவு கேவலமாக வும் பேசலாம், திட்டலாம். கைகலப்பில்லாமல் வெறும் வார்த்தைகள், சைகைகள் மூலமாக உச்ச கட்ட ஆபாசமாகவும் பேசிக் கொள்ளலாம்.
இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. மும்பை ஓர்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், ரன்வீர் சிங், திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹார் பங்கேற்றனர். இதில் நடிகை தீபிகா படுகோனே உட்பட பார்வையாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டியும், சைகைகள் காட்டியும் பரபரப்பாக்கினர். இந்த ஏஐபி நாக்அவுட் நிகழ்ச்சி யூடியூப்பிலும் வெளியானது.
இதையடுத்து மகாராஷ்டி ரத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கலாச்சாரத்தைக் கெடுப்பதாகக் கூறி அந்த நிகழ்ச்சியை எதிர்த்து பலர் குரல் கொடுத்தனர். இதையடுத்து ஏஐபி நாக் அவுட் வீடியோ யூ டியூபிலிருந்து நீக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆபாசமாக நடந்து கொண்டதாக மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் துணை ஆணையர் தனஞ்செய் குல்கர்னி நேற்று கூறும்போது, “தொலைக் காட்சியில் ஒளிபரப்பான ஏஐபி நாக்அவுட் ரோஸ்ட் நிகழ்ச்சியில் ஆபாசமாக நடந்து கொண்டதாக, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, கரண் ஜோஹார், அர்ஜுன் கபூர், ரன்வீர் சிங் உட்பட 14 பேர் மீது டார்டியோ காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தப்படும்” என்றார்.
பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் குற்ற சதி, ஆபாசமான செயல், ஆபாச பாடல், வார்த் தைகள், சைகைகள் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரத்தை பறிக்க கூடாது என்று பாலிவுட் நடிகர் கள் பலர் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.