

பிஹார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று ஜிதன்ராம் மாஞ்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மாஞ்சி பங்கேற்றார். அதன்பின் நிரு பர்களிடம் அவர் கூறியபோது, எனது கப்பல் ஒருபோதும் மூழ் காது என்று தெரிவித்தார்.
இதன்பின்னர் மாலை 5 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை, ஜிதன்ராம் மாஞ்சி சந்தித் துப் பேசினார். பிஹார் அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விரிவான ஆலோசனை நடத்திய தாகக் கூறப்படுகிறது.
இதன்பின்னர் நிருபர்களிடம் முதல்வர் மாஞ்சி கூறியதாவது: பிரதமர் மோடியுடன் அரசியல் பேச வில்லை. கங்கை நதியை தூய்மைபடுத்தும் திட்டம் குறித்தே அவரிடம் ஆலோசனை நடத்தினேன். பிஹாருக்காக பல்வேறு உதவிகளை பிரதமர் செய் துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்.
தர்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. நிதிஷ்குமார் நல்ல மனிதர்தான். ஆனால் ஆட்சி, அதிகாரம் இல் லாமல் அவரால் இருக்க முடியாது. முதல்வர் பதவியை ஒருபோதும் ராஜினாமா செய்யமாட்டேன். சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவேன். யார் ஆதரவு அளித்தாலும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். ஒருவேளை பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் பதவி விலகுவேன். பிஹார் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண உதவுமாறு பிரதமரிட மும் கோரிக்கை விடுத்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கட்சிகளின் பலம்
பிஹார் சட்டப்பேரவையின் பலம் 243. இதில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 115, பாஜக 88, ராஷ்டிரிய ஜனதா தளம் 24, காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட் 1 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 123 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
நிதிஷ்குமாருக்கு ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.