Last Updated : 06 Feb, 2015 12:13 PM

 

Published : 06 Feb 2015 12:13 PM
Last Updated : 06 Feb 2015 12:13 PM

நிதிஷ்குமாருடன் கருத்து மோதல்: பிஹார் முதல்வர் மாஞ்சியுடன் சரத்யாதவ் ரகசிய ஆலோசனை

பிஹார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியுடன், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவ் ரகசிய ஆலோசனை நடத்தினார்.

பிஹாரில் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமாருக்கும் தற்போதைய முதல்வர் ஜிதன் மாஞ்சிக்கும் இடையில் கடும் மோதல் நடந்து வருகிறது. இருதரப்பு ஆதரவாளர் களும் ஒருவரை ஒருவர் கடுமை யாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிஹார் முதல்வர் பதவியில் இருந்து மாஞ்சியை நீக்கிவிட்டு, மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராக்கப்படுவார் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பரபரப்பான சூழ்நிலையில், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் நேற்றுமுன்தினம் இரவு முதல்வர் மாஞ்சியை ஓட்டலில் தனியாகச் சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தி உள்ளார். இந்தச் சந்திப்பு அரை மணி நேரம் நடந்துள்ளது. இருவரும் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், ‘டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிந்தவுடன் பிஹார் அரசில் மாற்றங்கள் வரும். மேலும், பிப்ரவரி 20-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. அதற்குள் முதல்வர் மாற்றம் நடைபெறலாம்’’ என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஜனதா பரிவார் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஐக்கிய ஜனதா தள கட்சியினர் கூறுகின்றனர். அவர்கள் கூறும்போது, ‘‘ஜனதா கட்சிகளை ஒன்றிணைக்க தேவையான வழிமுறைகள் குறித்து நிதிஷ்குமாருடன் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தொலைபேசியில் ஆலோசனை நடத்தி உள்ளார். நிதிஷ்குமார் மீண்டும் முதல்வர் பதவியேற்றால் கட்சிகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். பிஹாரில் அடுத்த தேர்தலின் போது, நரேந்திர மோடியை பலம் கொண்டு எதிர்க்க முடியும் என்று அப்போது அறிவுறுத்தி உள்ளார் ’’ என்கின்றனர்.

“பிஹார் முதல்வர் பதவி விஷயத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எந்த முடிவு எடுத்தாலும், அது ஜனதா பரிவார் கட்சிகளை இணைக்கும் முயற்சிக்குப் பாதிப்பு ஏற்படுத்தாது’’ என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். லாலுவுக்கும் நிதிஷ்குமாருக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதனால், பிஹார் முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் வந்தால், ஜனதா கட்சிகள் இணைப்புக்கு லாலு ஆதரவு தெரிவிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக லாலு அவ்வாறு கூறியுள்ளார்.

இந்நிலையில், நிதிஷ் குமார் இல்லத்துக்கு நேற்று காலை சென்ற சரத்யாதவ் அவருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் வெளியில் வந்த சரத்யாதவிடம், மாஞ்சியை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘முதல்வர் பதவியில் இருந்து மாஞ்சியை நீக்குவது குறித்து நான் பேசவில்லை. இப் போதைக்கு அதுவல்ல முக்கிய விஷயம்” என்று சரத்யாதவ் பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x