

கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படுகிறது.
கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி., டி.ஹச்.ஹச்.எல்.சி., ஏ.ஹச்.எஸ்.எஸ்.எல்.சி உள்ளிட்ட 5 தேர்வுகளின் முடிவுகளை கல்வித் துறை அமைச்சர் அப்து ரப் காலை 11.30 மணிக்கு வெளியிடுகிறார்.
மொத்தம் 4,64,310 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினர். கடந்த ஆண்டு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ம் தேதி வெளியானது. இந்த ஆண்டு ஒரு வாரத்துக்கு முன்பே முடிவுகள் வெளியிடப்படுகின்றன. புனித வெள்ளி, ஈஸ்டர் என தொடர்ச்சியான விடுமுறைகளின் காரணமாக இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் முன்னதாகவே வெளியிடப்படுவதாக கேரள கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.