

ரயில்வே பட்ஜெட் மக்கள் விரோத பட்ஜெட்டாக உள்ளது என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவரு மான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
முன்னாள் ரயில்வே அமைச்சரான மம்தா இது தொடர் பாக மேலும் கூறியது: இது முழுவதும் வளர்ச்சிக்கு எதிரான, மக்கள் விரோத பட்ஜெட். ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று கூறி நாட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆட்சிக்கு வந்த உடனேயே டீசல் விலை உயர்வை காரணமாக காட்டி அதிக அளவில் ரயில் கட்டணத்தை உயர்த்தினார்கள். டீசல் விலை குறைந்தால் ரயில் கட்டணம் குறைக்கப்படும் என்று அப்போது கூறினார்கள். இப்போது டீசல் விலை பலமுறை குறைந்து விட்டது. ஆனால் கட்டணத்தை குறைக்கவில்லை. இது மக்களை முட்டாளாக்கும் முயற்சி.
ரயில்வே துறையில் மாநில அரசுடன் இணைந்து செயல்படு வோம் என்ற கூறுவது முழுவது மாக மாநில அரசுகளுக்கு எதிரான நடவடிக்கை. தாங்களாகவே நிதி திரட்ட முடியாமல், மாநில அரசு நிதியை சுரண்ட ரயில்வே பட்ஜெட்டில் திட்டத்தை அறிவித் துள்ளனர் என்று கடுமையாக குறை கூறியுள்ளார்.