காஷ்மீரில் கூட்டணி ஆட்சி?- பாஜக-பிடிபி பேச்சுவார்த்தை தொடர்கிறது

காஷ்மீரில் கூட்டணி ஆட்சி?- பாஜக-பிடிபி பேச்சுவார்த்தை தொடர்கிறது
Updated on
1 min read

காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சியுடன் (பிடிபி) தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று பாஜக தெரிவித்துள்ளது.

87 உறுப்பினர்கள் கொண்ட காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிடிபி-28, பாஜக 25, தேசிய மாநாட்டு கட்சி -15, காங்கிரஸ் 12 இடங்களில் வெற்றிபெற்றன. ஆட்சியமைக்க 44 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக, பிடிபி இடையே கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் ஜுகல் கிஷோர் சர்மா ஜம்முவில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

பாஜக, பிடிபி இடையே பேச்சுவார்த்தை தொடர்கிறது. ஆனால் எப்போது உடன்பாடு எட்டப்படும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. இப்போதைய நிலையில் இரு கட்சிகளுக்கும் இடையே குறைந்தபட்ச செயல்திட்ட கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. எதை சேர்ப்பது, எதை நிராகரிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.

மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். எனவே ஆட்சி அமைப்பதில் அவசரப்படமாட்டோம். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்கும் காஷ்மீரில் புதிய ஆட்சி அமைவதற்கும் தொடர்பில்லை. டெல்லி யில் பாஜக பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in