Published : 11 Feb 2015 09:28 AM
Last Updated : 11 Feb 2015 09:28 AM

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 15 பேர் வெற்றி

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால், புதுடெல்லி தொகுதியில் சுமார் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 15 வேட்பாளர்கள் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதாவது ஆம் ஆத்மி கட்சியின் ஒவ்வொரு 4 வேட்பாளர்களுக்கும் ஒருவர் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். இது ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. ஆம் ஆத்மி வேட்பாளர்களில் புராரி தொகுதியில் சஞ்சீவ் ஜா, விகாஸ்புரி தொகுதியில் மகிந்தர் யாதவ் ஆகியோர் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். டெல்லியில் இவர்கள் இருவர்தான் அதிகபட்ச வாக்கு வித்தியாசம் பெற்றுள்ளனர்.

ஆம் ஆத்மி வேட்பாளர்களில் பவானா தொகுதியில் வேத் பிரகாஷ் 50 ஆயிரத்தும் மேற்பட்ட வாக்குகள், தியோலி தொகுதியில் பிரகாஷ் 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள், ஒக்லா தொகுதியில் அமானதுல்லா கான் 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x