

டெல்லியில் பல்வேறு நபர்களிடம் கொள்ளையடித்த, திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த 9 பேர் கொண்ட கொள்ளை கும்பலை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் காரில் பயணம் செய்பவர்களை மடக்கி அவர்களிடம் இருந்து கைப்பைகளை பிடுங்கிச் செல்லும் சம்பவம் அதிகமாக நடைபெற்று வந்தது.
காரில் இருந்து இறங்குபவர்கள் அருகே ரூபாய் நோட்டுகளை சிதற விட்டு கவனத்தை திசை திருப்புவது இத்திருட்டுக்கும்பலின் பாணியாக இருந்துள்ளது. கடந்த டிசம்பர் 17-ம் தேதி மும்பையில் இருந்து தரியாகஞ்ச் பகுதிக்கு காரில் வந்த வைர வியாபாரி நீலேஷ் ஷா, தனது ஓட்டுநரை பாக்கு வாங்குவதற்காக கடைக்கு அனுப்பி விட்டு காரில் அமர்ந்திருந்தார். அப்போது, கண்ணாடியை தட்டிய ஒருவர் அவரது பத்து ரூபாய் நோட்டு தவறி கீழே விழுந்ததாகக் கூறியுள்ளார்.
அதை எடுக்க இறங்கியவரின் கைப்பையை மறுபக்கமாக வந்த கும்பல் பறித்துக் கொண்டு ஓடி விட்டது. அதில், ரூபாய் ஒன்றரை கோடி மதிப்புள்ள வைரம் இருந்திருக்கிறது.
இதற்கு முன்பாக அதே பாணி யில் கன்னாட் பிளேஸ் பகுதியின் நின்றிருந்த காரில் ஒரு லட்சம் ரூபாய், அமெரிக்காவின் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருந்த கைப்பை திருடப்பட்டுள்ளது.
இச்சம்பவங்கள் தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் கைது செய்யப்பட்டது.
இதில் ராம்ஜி நகரை சேர்ந்த பி.குமரன் வயது 43, ரங்கநாதன் 40, பிரபாகர் 34, அகிலன் 23, ஸ்டாலின் 26, முத்துக்குமார் 30, திண்டுக் கல்லின் முனிலாக்கோட்டையை சேர்ந்த பெருமாள் 50, சின்ன கொத்த மங்கலத்தை சேர்ந்த லோகநாதன் 24 மற்றும் சீனாக்கரையை சேர்ந்த சரவணகுமார் 25 ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதி களில் காரில் பயணம் செல்பவர் களை குறி வைத்து திருடி வந்தது தெரிய வந்துள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி காவல்துறை இணை ஆணையர் ரவீந்திர யாதவ் கூறும்போது, “கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை அவர்கள் 12 திருட்டுக்களை செய்துள்ளனர். இவை அனைத்தி லும் ரூபாய் நோட்டுகளை வீசி திசை திருப்பும் ஒரே மாதிரியான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனர். கடைசியாக இதே பாணியில் சண்டி கரில் மூன்று பேரிடம் திருடியுள்ள னர். இவர்களுடன் மேலும் சிலர் இந்தப் பகுதியில் கொள்ளை அடிப் பதற்காக சுற்றிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் களையும் தேடி வருகிறோம்’ எனத் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர் களிடமிருந்து ரூ. 62,500, ஒரு காசோலை புத்தகம், ஒரு மொபைல் மற்றும் முக்கிய ஆவணங்களுடன் கைப்பை ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.