

ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கடந்த ஒரு வார காலமாக இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "வியாழக்கிழமை இரவு, அர்.எஸ்.புரா பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். தாத்தி பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எல்லை பாதுகாப்புப் படையினர் திருப்பித் தாக்குதல் நடத்தவில்லை.
இருப்பினும், ஒரு வார இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை தொடங்கியிருப்பதால் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதால் எல்லையில் கண்காணிப்பை எல்லைப் பாதுகாப்புப் படை அதிகரித்துள்ளது" என்றார்.