

பாஜக-வின் பிரதமர் வேட்பாளர் மோடியின் யோசனையின்படி நாடு முழுவதும் உள்ள அரசியல் பின்புலம் இல்லாத சிறுபான்மை இந்துக்களை ஒருங்கிணைத்து ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ளது.
உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட வட மாநிலங் களில் விஸ்வகர்மா, குஷாவா, கஸ்யாப், பகேல், ஷாக்கியா, பிரஜாபதி ஆகிய இந்து சமூகத் தினர் சிறுபான்மையினராக இருக்கின்றனர். சில சமூகத்தினர் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் அவர்கள் அரசியல் பின்புலம் இல்லாமலும், ஒரே இடத்தில் வசிக்காமல் ஆங்காங்கே சிதறியும் காணப்படு கின்றனர். இதுபோல் நாடு முழுக்க இருக்கும் குறைந்த எண்ணிக் கையிலான இந்துக்களை ஒருங் கிணைத்தாலே பாஜக-வுக்கு கூடுதலாக 10 முதல் 13 சதவீதம் வரை ஓட்டுகள் கிடைக்கும் என்று மோடியின் ஆலோசகர்கள் புள்ளிவிவரங்களை சேகரித்து மோடியிடம் சமர்பித்துள்ளனர்.
அதன்படி அனைத்து மாநிலங் களிலும் உள்ள இந்து சிறுபான்மை யினரை ஒருங்கிணைத்து ஆதரவு திரட்டும்படி பாஜக தலைமை, அக்கட்சியினருக்கு உத்தர விட்டுள்ளது. வட இந்தியாவில் இந்த உத்தி தீவிரமாக பின்பற்றப் பட்டு வரும் சூழலில் தமிழக பாஜக தலைவர்களும், வேட்பாளர்களும் அதனைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
விஸ்வகர்மா, உடையார், குயவர், நாயர், செளராஷ்டிரா, சாலியர், யாதவர், போயர், ஒட்டர், கிருஷ்ணவகை செட்டியார் ஆகிய சமூகத்தினரை அவர்கள் வைத்திருக்கும் அமைப்புகள் மூலமும் முக்கியப் பிரமுகர்கள் மூலமும் சந்தித்து பாஜக-வினர் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
தென் சென்னையில் இல.கணே சன் யாதவர் சமூகத்தினர் மற்றும் விஸ்வகர்மா சமூகத்தி னரின் கைவினைஞர்கள் சங்கத் தினரை சந்தித்து ஆதரவு திரட்டி இருக்கிறார். பொன்.ராதாகிருஷ்ணன் தக்கலை, பத்ம நாபபுரம், காப்புக்காடு, வில்லுகிரி ஆகிய பகுதிகளில் கிருஷ்ணவகை சமூகத்தினரையும், கோட்டாறு வடசேரியில் செளராஷ் டிரா சமூகத்தினரையும், குலசேகரப் பட்டினத்தில் நாயர் சமூகத்தி னரையும், கிருஷ்ணகோயில் பகுதியில் சாலியர், யாதவர் சமூகத்தினரையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் குப்புராம் பரமக்குடி பகுதியில் செளராஷ்டிரா மற்றும் உடையார் சமூகத்தினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இதன் மூலம் ஒவ்வொரு தேர்தலிலும் யாருக்கு ஓட்டு போடுவது என்று அந்தந்தச் சமயத்தில் முடிவு எடுக்கும் மேற்கண்ட இந்து சமூகத்தினரின் ஓட்டுகளை, மொத்தமாக வளைக்க பாஜக திட்டமிட்டுள்ளது