

டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மீண்டும் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர் பாக அரசு பஸ் ஓட்டுநர், நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கன்னோஜை சேர்ந்த இளம்பெண் டெல்லிக்கு அருகில் உள்ள தாத்ரிக்கு நேற்றுமுன்தினம் அரசு பஸ்ஸில் சென்றுள்ளார்.
கன்னோஜில் இருந்து டெல்லி யின் ஆனந்த் விஹார் பஸ் நிலை யம் வரை செல்லும் உத்தரப் பிரதேச அரசு பஸ்ஸில் அவர் பயணம் செய்தார். பஸ்ஸில் அவர் தூங்கிவிட்டதால் தாத்ரியில் இறங்கவில்லை. கடைசி பஸ் நிலையமான ஆனந்த் விஹாருக்கு நள்ளிரவு 2 மணிக்கு பஸ் வந்து சேர்ந்துள்ளது.
அப்போது தன்னை மீண்டும் தாத்ரியில் திரும்ப கொண்டு போய் விடுமாறு ஓட்டுநர், நடத்துநரிடம் கோரியுள்ளார். இதை ஏற்றுக் கொண்ட இருவரும் ஓடும் பஸ்ஸில் அந்த பெண்ணை பலாத்காரம் செய் துள்ளனர். பின்னர் தாத்ரியில் இறக்கி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தாத்ரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் அரசு பஸ் ஓட்டுநர் சந்த்ராம் நடத்துனர் மனோஜ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.