விமான நிலைய ஊழியர்கள் மார்ச் 11-ல் வேலைநிறுத்தம்

விமான நிலைய ஊழியர்கள் மார்ச் 11-ல் வேலைநிறுத்தம்
Updated on
1 min read

விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தைக் கண்டித்து ஊழியர் சங்கங்கள் சார்பில் மார்ச் 11-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

சென்னை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், அகமதாபாத் உள்ளிட்ட விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில் ஏற்கெனவே ரூ.5 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தனியார்மயத்தை எதிர்த்து மார்ச் 11-ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in