Published : 25 Feb 2015 10:38 AM
Last Updated : 25 Feb 2015 10:38 AM

2 வாரங்களில் ராகுல் திரும்புவார்: காங்கிரஸ் தகவல்

காங்கிரஸ் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுபட்டு விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ள ராகுல் காந்தி இன்னும் இரண்டு வாரங்களில் திரும்புவார் என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுமுன்தினம் தொடங்கியது. முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்காமல் ராகுல்காந்தி வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறும்போது, கட்சிப் பொறுப்புகளில் இருந்து ராகுல் விடுபட்டு தற்காலிக விடுப்பில் சென் றிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த மக்களவைத் தேர்தல் முதல் காங்கிரஸ் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. கட்சி வட்டாரத்திலேயே சிலர் எதிர்மறையான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

வரும் ஏப்ரலில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெறு கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இந்தப் பின்னணியில் அவர் கட்சி பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விலகியிருப்பதாகக் கூறப்படுவது நாடு முழுவதும் பெரும் விவாதப்பொருளாகி உள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியதாவது:

ராகுல் இந்தியாவில் இருக் கிறாரா, வெளிநாட்டில் இருக்கிறாரா என்பது குறித்து ஏராளமான கேள்வி கள் எழுப்பப்படுகின்றன. அவர் கோபமாக இருக்கிறாரா, அமைதி யாக இருக்கிறாரா என்றுகூட அலசி ஆராயப்படுகிறது. இது மிகவும் சாதாரண விஷயம். இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

ராகுல் காந்தி இன்னும் இரண்டு வாரங்களில் திரும்பிவிடுவார், அநேகமாக அவர் மார்ச் 10-ம் தேதிக்குள் டெல்லி வருவார் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் ட்விட்டரில் வெளியிட் டுள்ள பதிவில், ராகுல் காந்திக்கு ஓய்வு தேவைப்படுகிறது, அவர் தற்போது அமைதியை விரும்பு கிறார் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x