Last Updated : 12 Feb, 2015 10:35 AM

 

Published : 12 Feb 2015 10:35 AM
Last Updated : 12 Feb 2015 10:35 AM

சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீடு: கூட்டு சதியில் ஈடுபடாதவர்களை நீதிமன்றம் எப்படி தண்டிக்கும்? - சுதாகரன், இளவரசி தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி கண்டனம்

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கில் சுதாகரன், இளவரசி தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், வழக்கறிஞரு மான சுதந்திரம் வாதிட்டதாவது:

1991-96 காலகட்டத்துக்கு முன்பிருந்தே சுதாகரனும் இளவரசியும் பல்வேறு நிறுவனங் களில் பங்குதாரராகவும், நிர்வாக இயக்குநராகவும் இருந்துள்ளனர். இதன் மூலம் கிடைத்த வருமானத்தை பல்வேறு தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். இதற்கு வருமான வரி செலுத்தியுள்ளனர்.

வழக்கு விசாரணையின் போது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார், சுதாகரனும் இளவரசியும் தொடர்பு வைத்திருந்த நிறுவனங்களை விசாரித்தனர். அவர்கள் பங்கு தாரராக இருந்த மெடோ அக்ரோ ஃபார்ம், லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ், ரிவர்வே அக்ரோ ஃபார்ம், ராம் ராஜ் அக்ரோ ஃபார்ம், சூப்பர் டூப்பர் டிவி, சைனோரா ஃபைனான் சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கினர்.

இந்த நிறுவனங்களின் சொத்துகள் அனைத்தும் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமானவை என்றும் இந்த நிறுவனங்களுக்கு ஜெயலலிதாவும் சசிகலாவும் நிதி வழங்கியுள்ளனர் எனவும் கூறி யுள்ளனர். ஆனால் எவ்வித ஆதா ரத்தையும் தாக்கல் செய்யவில்லை.

அரசுத் தரப்பு சாட்சி லட்சுமி நாராயணன் வாக்குமூலத்தின்படி 1994-96 வரை மட்டுமே சுதாகரனும் இளவரசியும் அந்த நிறுவனங் களுக்கு இயக்குநர்களாக இருந் தார்கள். தனியார் நிறுவனங்களின் சொத்துகள் ஒரு போதும் இயக்கு நருக்கோ, பங்குதாரருக்கோ சொந்தமாக முடியாது.

1991-96 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த‌ ஜெய லலிதாவுடன் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கூட்டுசதியில் ஈடுபட்டு சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. நால்வரும் ஒரே வீட்டில் வசித்த ஒரே காரணத்துக்காக இவ்வழ‌க்கு தொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுதந்திரம் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “வழக்கு விசாரணை தொடங்கி 18 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. விசாரணை காலத்திலேயே நீதிமன்றத்தை அணுகி, நீங்கள் குற்றமற்றவர்கள் என நிரூபித் திருக்கலாமே? குற்றவியல் நடை முறைச்சட்ட‌ம், ஊழல் தடுப்பு சட்டத்தின்படி குற்றம் செய்யதாவர் களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்க முடியுமா? தவறு செய்யாத வர்களை தண்டிக்க முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.

வழக்கின் அடுத்தக்கட்ட விசா ரணை இன்று ஒத்தி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x