Last Updated : 12 Feb, 2015 08:50 AM

 

Published : 12 Feb 2015 08:50 AM
Last Updated : 12 Feb 2015 08:50 AM

அர்விந்த் கேஜ்ரிவால் வெற்றிக்குப் பின்னால் நவீன சாமானிய மனுஷி சுனிதா கேஜ்ரிவால்

ஆண்களின் வெற்றிக்குப் பின்னால் பெண்கள் இருக்கிறார்கள் என்று கூறுவதுண்டு. அந்த வகையில் டெல்லி முதல்வராக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள அர்விந்த் கேஜ்ரி வால் வெற்றியில் அவரது மனைவி சுனிதாவுக்கும் பங்கு உண்டு என்றே கூறலாம்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்த லில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் வெளி யாகிக் கொண்டிருந்தபோது, டெல்லி பட்டேல் நகர் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு மனைவி சுனிதாவுடன் வந்த கேஜ்ரி வால், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தனது மனைவியை ஆரத் தழுவி நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்ட ரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதுவரை போராட்டங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் கேஜ்ரிவாலை மட்டுமே பார்த்து வந்த அவரது ஆதரவாளர்கள், முதன்முறையாக பொது இடத்தில் மனைவியைத் தழுவுவது போன்ற புகைப்படத்தைப் பார்த்து நாடு முழுவதும் உள்ள கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். இனிப்புகளை வழங்கி கொண் டாடினர்.

பொதுவாக முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளி உலகுக்கு பரிச்சயமானவர்களாக இருப்பார் கள். பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். ஆனால் கேஜ்ரி வால் மனைவி அவ்வாறு இல்லாமல் இதுவரை வெளி உலகத் துக்கு தெரியாமலேயே இருந்து வந்தார்.

தனது கணவர் அரசியலில் ஈடுபட்டுள்ள போதிலும், அரசியல் குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவித்ததும் இல்லை. இதனால் நவீன சமானிய மனுஷியாக சுனிதா இருக்கிறார். இதனால் தான் முதன்முறையாக அவரது புகைப்படத்தைப் பார்த்த ஆதர வாளர்கள் மகிழ்ச்சியில் திளைத் தனர்.

இதுகுறித்து தேர்தல் முடிவு வெளியான நாளில் கேஜ்ரிவால் கூறும்போது, “என் மனைவியை கட்டாயப்படுத்தி இங்கு அழைத்து வந்தேன். இங்கு வந்ததற்காக அரசு நடவடிக்கை எடுக்காது என்று அவரிடம் தெரிவித்தேன். அவரது ஆதரவு இல்லாமல் இருந்தி ருந்தால் என்னால் தனியாக எதையும் சாதித்திருக்க முடியாது” என்றார்.

இந்திய வருவாய் துறையில் (ஐஆர்எஸ்) சுனிதா பணியாற்றி வருகிறார். தனது கணவர் டெல்லி முதல்வராக பொறுப்பேற்க உள்ள போதிலும், மற்ற அரசியல் வாதிகளின் மனைவியைப் போல தனது அரசு பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என கூறியுள்ளார்.

தனது கணவர் கேஜ்ரிவால் அரசியலில் ஈடுபட்ட நிலையில், குடும்பத்தை நடத்துவதற்கு உறு துணையாக இருந்த தனது வேலையை பாதியிலேயே கைவிடு வது சரியானதல்ல என்றும் அவர் கருதுகிறார்.

இதுவரை ஊடகங்களில் தோன் றாதது குறித்தும் அரசியல் குறித்து கருத்து தெரிவிக்காதது குறித்தும் சுனிதா கூறும்போது, “நான் ஒரு அரசு ஊழியர் என்பதால், அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. அது சட்டத்துக்கு புறம்பானதும்கூட” என்றார். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதாவை, சுனிதாவுடன் ஒப்பிட லாம். ஏனெனில், தனியார் வங்கி அதிகாரியான அம்ருதா, தனது கணவர் முதல்வரானபோதும் வேலையில் தொடர்கிறார். அதே நேரம் கணவரின் அரசியல் வாழ்க் கைக்கும் உறுதுணையாக இருந்து வருகிறார்.

ஐ.ஆர்.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்ற அர்விந்த் கேஜ்ரிவாலும் சுனிதாவும் முசோரி பயிற்சி மையத்தில் முதல்முறையாக சந்தித் தனர். நாளடைவில் அவர்களி டையே காதல் மலர்ந்தது. பின்னர் இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளாகிவிட்டன.

ஒரு கால கட்டத்தில் தன்னார்வ தொண்டு பணிகளில் ஈர்க்கப்பட்ட அர்விந்த் கேஜ்ரிவால், அரசுப் பணியை கைவிட்டு முழுநேர சமூக சேவையில் இறங்கினார். குடும்ப பொறுப்புகளை சுனிதா தனது தோளில் தாங்கிக் கொண்டார்.

கடந்த 2013 டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் 70 தொகுதிகளில் 28 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி சாதனை படைத்தது. 49 நாளில் முதல்வர் பதவியை கேஜ்ரிவால் துறந்தார். அதைத் தொடர்ந்து நடந்த மக்கள வைத் தேர்தலில் ஆம் ஆத்மி கடும் பின்னடைவைச் சந்தித்தது.

இருந்தாலும் மனம் தளராமல், தனது சிறு சிறு தவறுகளை திருத்திக் கொண்டு, டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் சாதூர்யமாக செயல்பட்டு வெற்றிக்கனியைப் பறித்துள்ளார் கேஜ்ரிவால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x