இந்திய கலாச்சார மையங்களை பாதுகாக்க முக்கியத்துவம்

இந்திய கலாச்சார மையங்களை பாதுகாக்க முக்கியத்துவம்
Updated on
1 min read

இந்தியாவின் 25 கலாச்சார பாரம்பரிய மையங்களில் வசதிகள் குறைவாக உள்ளதாகவும், அவை மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

2015 - 16 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார்.

அப்போது அவர், "வசதிகள் குறைவாக உள்ள 25 கலாச்சார பாரம்பரிய மையங்கள் மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

பாரம்பரிய புராதன மையங்களை பராமரிப்பது, வாகன நிறுத்தம் வசதி, மாற்று திறனாளிகளுக்கான வசதி, விளக்கம் அளிக்கும் மையங்கள் சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பு, கழிப்பறை, விளக்குகள் அமைப்பது, கலாச்சார மையங்களை சுற்றி உள்ள சமுதாயத்தினருக்கு பலன் அளிக்கும் நடவடிக்கைகள் போன்ற வசதிகள் செய்து தரப்படும்" என்றார்.

முதற்கட்டமாக 8 கலாச்சார மையங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஜேட்லி அறிவித்தார். அவை:

1. சர்ச்சுகள் மற்றும், கான்வென்ட் – கோவா.

2. ஹம்பி - கர்நாடகா.

3. கும்பல்கார் மற்றும் இதர மலை சார்ந்த கோட்டைகள் – ராஜஸ்தான்.

4. ராணி கீ வவ், பதான் - குஜராத்.

5. லே அரண்மனை, லடாக் - ஜம்மு-காஷ்மிர்.

6. வாரணாசி, கோவில் நகரம்- உத்திர பிரதேசம்.

7. ஜாலியன்வாலா பாக், அமிர்தசரஸ் – பஞ்சாப்.

8. குதூப் ஷாஹி சமாதி, ஹைதராபாத்- தெலுங்கானா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in