

மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டுள்ள சுதிப்தா சென்னின் நெருங்கிய உதவியாளர் பிரசாந்தோ நஸ்கர் என்பவரை அமலாக்கப்பிரிவு நேற்று கைது செய்தது.
சாரதா நிதித் திட்டங்களில் பிஷண்பூர் பகுதியில் பிரசாந்தோ நஸ்கர் முகவராகச் செயல்பட்டுள் ளார். அவர் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் சுதிப்தா சென்னுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் எனத் தெரியவந்துள்ளது.