தகவல் கோரும் விண்ணப்பங்களுக்கு முறைப்படி பதில் அளிக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

தகவல் கோரும் விண்ணப்பங்களுக்கு முறைப்படி பதில் அளிக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
Updated on
1 min read

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் மேல்முறையீடுகளுக்கு உரிய விதிகளின் கீழ் முறையாக தீர்வு காணவேண்டும் என்று அமைச் சகங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

தகவல் கோரும் விண்ணப் பத்தை பொது தகவல் அதிகாரி நிராகரிக்கும்போது அதற்கான காரணத்தை தெரிவிக்கவேண்டும். இத்துடன் விண்ணப்பதாரர் எவ் வளவு காலத்துக்குள், யாரிடம் மேல்முறையீடு செய்யலாம் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால் அது தொடர் பான விவரங்களை அளிக்க வேண்டும்.

முதல் மேல்முறையீட்டு மனு வுக்கு தீர்வு காணும்போது, முதல் மேல்முறையீட்டு அதிகாரிகள் நியாயமாகவும், நேர்மையுடனும் நடந்துகொள்ள வேண்டும். முதல் மேல்முறையீட்டு அதிகாரி பிறப்பிக்கும் உத்தரவு விளக்க மாகவும் தங்களின் முடிவுக்கான காரணங்களை தெரிவிக்கும் வகை யிலும் இருப்பது மிகவும் முக்கியம்.

மேல்முறையீட்டு மனுக்க ளுக்கு தீர்வுகாணும்போது, விண்ணப்பதாரருக்கு பொது தகவல் அதிகாரி கொடுத்த தகவல்களை விட கூடுதல் தகவல்கள் தரப்பட வேண் டும். இந்த கூடுதல் தகவல்களை விண்ணப்பதாரருக்கு மேல் முறையீட்டு அதிகாரி தாமாகவே அளிக்கலாம். அல்லது பொது தகவல் அதிகாரிக்கு உத்தரவிட்டும் அளிக்கச் செய்யலாம்.

மேலும் இந்தத் தகவல்கள் விண் ணப்பதாரருக்கு உடனடியாக வழங் கப்படுவதை மேல்முறையீட்டு அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும்.

என்றாலும் இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு அதிகாரிகள் தங்கள் உத்தரவுடன் கூடுதல் தகவல்களை தாங்களே அளிப்பது சிறந்தது. இவ்வாறு அந்த உத்தர வில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in