Last Updated : 06 Feb, 2015 01:28 PM

 

Published : 06 Feb 2015 01:28 PM
Last Updated : 06 Feb 2015 01:28 PM

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: தயாநிதி, கலாநிதி மனு விசாரணைக்கு ஏற்பு - முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்றம்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தங்களுக்கு சம்மன் அனுப்பி யுள்ளதை எதிர்த்து கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. முன்ன தாக, மனுவை தள்ளுபடி செய்த தனது உத்தரவைத் திரும்பப் பெற்றது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசா ரணைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், ஏர்செல்-மேக்சிஸ் வழக் கில் தங்களுக்கு சம்மன் அளித்துள் ளதை எதிர்த்து கலாநிதி மாறன் மற்றும் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர் பான வழக்குகளை விசாரிப்பதற்காக மட்டுமே சிறப்பு நீதிமன்றம் அமைக்கப் பட்டது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுடன் தொடர் புடையதல்ல. எனவே, இவ்வழக்கில் தங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது சிறப்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்பு குறித்து கேள்வியெழுப்பும் வகையில் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இம்மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.கோபால கவுடா, ஆர் பானுமதி ஆகி யோரடங்கிய அமர்வு முன்பு விசா ரணைக்கு வந்தது. அப்போது, இம் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்து விட்டனர். “ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ஏற் கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இவ்விவ காரத்தில் நாங்கள் தலையிட முடியாது. குற்றப்பத்திரிகையும் திருப்திகரமாக உள்ளது. அதன்அடிப்படையில்தான் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இதில் அதிகார வரம்பு மீறப்பட்டதாக நாங்கள் கருதவில்லை. இம்மனு மீது நாங்கள் ஏதேனும் தெரிவித்தால், பிறகு ஒவ்வொருவரும் தங்களது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தை அணுகக் கூடும். சம்மனை எதிர்த்து நேரடியாக ஏன் இங்கு வர வேண்டும். வேண்டுமெனில் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகுங் கள். இம்மனுவை விசாரிக்க முடியாது. ஒருவேளை உங்கள் மீது வழக்கு எதுவும் இல்லை என்றால், அப்போது வேண்டுமானால் எங்களை அணுக லாம்” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மீண்டும் விசாரணைக்கு ஏற்பு

இந்த உத்தரவு வெளியான சில மணி நேரத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான, சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், `2ஜி அலைக்கற்றை தொடர்பாக எழும் அனைத்து வழக்குகளும் நேரடியாக உச்ச நீதிமன்ற விசாரணைக்கே வர வேண்டும். வேறு நீதிமன்றங்களில் விசாரிக்கக்கூடாது’ என ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார்.

இதையடுத்து, மாறன் சகோதரர் களின் மனுவை ஏற்க முடியாது என்ற தங்களது முந்தைய உத்தரவை நீதிபதிகள் திரும்பப் பெற்றனர். அம்மனு, தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அமர்வு முன்பு வரும் 9-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அறிவித்தனர்.

வழக்கின் பின்னணி

ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை கட்டாயப்படுத்தி அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்ததாகவும், அதற்குப் பலனாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து வேறொரு நிறுவனம் வழியாக சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்ததாகவும் தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

இவ்வழக்கில், தயாநிதி, கலாநிதி மற்றும் இதர 6 பேர் வரும் மார்ச் 2-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி, கடந்த அக்டோபர் மாதம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x