

மிசோரம், அருணாச்சல பிரதேசத்தின் மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டரில், “மிசோரம் மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநிலத்தில் உள்ள எனது சகோதர சகோதிரிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். வரும் ஆண்டுகளில் முன்னேற்ற பாதையில் இந்த மாநிலம் புதிய உயரத்தை எட்டட்டும்.
அருணாச்சல பிரதேச மக்களுக்கு எனது மாநில தின வாழ்த்துக்கள். அருணாச்சல பிரதேசம் அதன் அழகுக்கும் அன்பான மக்களுக்கும் புகழ்பெற்ற இடம். இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க நான் உறுதி கொண்டுள்ளேன்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.