

ரயில்வே அமைச்சர் சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள தாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அனைத்து எதிர்க்கட்சிகளும் பட்ஜெட்டை குறை கூறியுள்ள நிலையில் சமாஜ்வாதி மட்டும் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக முலாயம் சிங் நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியே மேலும் கூறியது:
ரயில்வே அமைச்சர் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க வில்லை. புதிய வாக்குறுதிகள் எதை யும் கூறவில்லை. அதே நேரத் தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த முன் னுரிமை அளித்துள்ளார். எனவே இது சிறப்பான பணிதான். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றினா லேயே ரயில்வே அமைச்சர் அனை வராலும் பாராட்டப்படுவார். 15 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப் பட்ட ரயில்வே திட்டங்கள் கூட கிடப்பில் உள்ளன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே புதிய அறிவிப்புகள் இல்லா விட்டாலும், இந்த பட்ஜெட் திருப்தியானதுதான் என்றார்.
காங்கிரஸ் கட்சி பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்க முலாயம் சிங் மறுத்துவிட்டார்.
சமீபத்தில் முலாயம்சிங்கின் பேரன் - லாலுவின் மகள் திருமணத் துக்கான நலுங்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
அரசியல் ஆதரவுக்காகவே இந்நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கேற்ப பட்ஜெட்டை முலாயம் ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது