

பிஹார் முதல்வர் பதவியை மாஞ்சி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தனது முதல் கருத்தை பதிவு செய்த ஐக்கிய ஜனதாதளத் தலைவர் நிதிஷ் குமார் கூறும்போது,
"மாஞ்சி முன்னரே பதவி விலகியிருக்க வேண்டும். பிஹார் அரசியிலில் பாஜக எண் விளையாட்டு விளையாட நினைத்தது.
ஆனால், அதன் விளையாட்டு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மாஞ்சியை வைத்து அவர்கள் தீட்டிய திட்டம் அம்பலமாகியுள்ளது. நாங்கள் கூறியது உண்மைதான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றார்.
பிஹார் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி தனது பதவியை ராஜினாமா செய்தார்.