

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட 68 முஸ்லிம் வேட்பாளர்களில் வெறும் 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பலிமாரன் தொகுதியில் போட்டியிட்ட இம்ரான் உசைன், மத்தியா மஹாலில் அசீம் அகமது கான், ஓக்ளாவில் அமானத்துல்லா கான் மற்றும் சீலாம்பூரில் முகம்மது இஷ்ராக் ஆகிய 4 பேர் வெற்றி பெற்றவர்கள் ஆவர்.
டெல்லி தேர்தலில் கடந்தமுறை 108 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் இந்த முறை 68 பேர் மட்டுமே போட்டியிட்டனர்.
டெல்லியின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 17 சதவிகிதம் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இதில் கடந்த தேர்தலின்போது காங்கிரஸுக்கு வாக்களித்தவர்களில் 53 சதவிகித வாக்களர்கள் இந்தமுறை ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.