

ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக காங்கிரஸ் தலை வர் சோனியாகாந்தி, பிஹார் முதல் வர் நிதிஷ் குமார் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சோனியா காந்தியின் கருத்தாக காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ரயில்வே பட்ஜெட் மிகவும் ஏமாற்றமளிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் திட்டங்களைத்தான் மீண்டும் அறிவித்துள்ளார்கள். புதிதாக ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளார். முன்னாள் ரயில்வே அமைச்சரான நிதிஷ் குமார் கூறியிருப்பது: எந்த செயல்திட்டமும் இல்லாத ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். இது அரைகுறை பட்ஜெட். பயணிகள் இல்லாத வெறும் ரயில் பெட்டிகளை மட்டும் ஓட்டும் நடவடிக்கையாக பட்ஜெட் உள்ளது. புல்லட் ரயில் என்று பல ரயில்வே அமைச்சர்கள் அறிவித்துவிட்டனர்.
ஆனால் இந்தியாவில் அது செயல்படுத்த முடியாத திட்டமாகவே உள்ளது. தனியாருக்கு கதவுகளை திறந்து விடக் கூடாது. அதனால் ரயில் வேக்கு ஒரு நன்மையும் ஏற் படாது. மொத்தத்தில் இது ஏமாற் றம் அளிக்கும் பட்ஜெட் என்று கூறியுள்ளார்.