

தமிழகத்தைப் போல மதுபானக் கடைகளை நடத்தப் போவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, நிதி அமைச்சர் யனமல ராமகிருஷ்ணுடு நேற்று ஹைதரா பாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆந்திர மாநிலத்தில் இப்போது மதுபானக்கடைகள், பார்கள் ஆகியவை டெண்டர் மூலம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளன. வரும் 2015-16 வருவாய் ஆண்டு முதல் தமிழகத்தைப் போல பார் களையும், மதுபானக் கடைகளை யும் அரசே ஏற்று நடத்தும். இதன் மூலம் வேலைவாய்ப்பும் உருவாக் கப்படும். ஆனால், தமிழத்தில் உள்ளதைப் போன்ற திட்டத்தைச் செயல்படுத்துவதா அல்லது சற்று மாற்றி செயல் படுத்துவதா என விரைவில் முடிவு செய்யப்படும். இவ்வாறு ராமகிருஷ்ணுடு தெரிவித்தார்.