

நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்திருக்கும் நிலையில், அனைத்து மாநிலங்களிலும் 24 மணிநேர `ஹெல்ப்லைன்' சேவை அளிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பன்றிக் காய்ச்சல் தடுப்பு தொடர் பான ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சரவை செயலர் அஜித் குமார் சேத், இந்த உத்தர வைப் பிறப்பித்துள்ளார். மருந்து களை தேவையான அள வுக்கு இருப்பு வைத்திருக்க மருந்து நிறுவனங்களுக்கும் உத்தரவிட் டுள்ளார்.
நேற்று முன்தினம் மட்டும் நாடு முழுவதும் 663 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். நாகாலாந்து போன்ற மாநிலங் களுக்கும் இது பரவியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
பன்றிக் காய்ச்சல் நிலவரம் குறித்து அனைத்து மாநிலங்களுட னும் தொலைபேசி மற்றும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவ தாக மத்திய சுகாதார அமைச்சகத் தின் செயலர் பி.பி.சர்மா கூறி யுள்ளார்.
இதற்கிடையே, அவரிடம் ராஜஸ் தான், குஜராத், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், தெலங்கானா, ஆந்திர பிரதேசம், ஹரியாணா மற்றும் டெல்லி ஆகியவற்றைச் சேர்ந்த முதன்மைச் செயலர்கள் தங்கள் மாநிலங்களில் மருந்துகள், பரிசோதனைக் கருவிகள், ஆய் வகங்கள், முகக்கவசங்கள் ஆகிய வற்றின் கையிருப்பு குறித்து விளக்கமளித்தனர்.
மத்திய அரசின் கணக்கெடுப் பின்படி, நேற்று முன்தினம் வரை பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 10,025 பேர் பலியாகியுள்ளனர். இது சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட பன்றிக் காய்ச்சல் மரணங்களில், அதிக எண்ணிக்கை கொண்டதாகும் என்று கூறப்படுகிறது.