

மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்தாரா மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் காதலர் தினத்தை, அன்னையர் தினமாக கடைபிடிக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
நாளை பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்தாரா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அதிகாரி (ஆரம்பக்கல்வி) ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 11-ம் தேதியே இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், "காதலர் தினத்தை அன்னையர் தினமாக கொண்டாடவும். பிப்ரவரி 14-ம் தேதியன்று பள்ளியில் குழந்தைகள் அன்னையரை போற்றும் வகையில் பாடல்களைப் பாடும்படி ஊக்குவிக்கவும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.