Last Updated : 06 Feb, 2015 12:17 PM

 

Published : 06 Feb 2015 12:17 PM
Last Updated : 06 Feb 2015 12:17 PM

டெல்லி தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம்: 2,000 கேமராக்களுடன் ஆம் ஆத்மி கண்காணிப்பு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதை கண்காணிப்பதற்காக தங்களது தொண்டர்களுக்கு 2,000 கேமராக்கள் விநியோகிக்க ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஆம் ஆத்மி கட்சியின் செய்தித்தொடர்பாளர்களில் ஒருவரான அத்தீஷி மர்லேனா கூறும்போது, “தேர்தல் நாளில் தமக்கு சாதகமான வாக்குகளை பெறும் பொருட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் மது பாட்டில்கள் வழங்குவதைத் தடுக்க எங்கள் கட்சி முயற்சிக்கும். இதற்காக, 6,000 குரல் பதிவு சாதனம் மற்றும் 2,000 ரகசிய வீடியோ கேமராக்களையும் தொண்டர்களுக்கு வழங்கி இருக்கிறோம். இதன்மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் பிடிபடுவார்கள்” என்றார்.

ஆம் ஆத்மி தொண்டர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்தி, கண் காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அத்துடன் அவர்கள் செயல்பட வேண்டிய முறை மற்றும் கேமராவை கையாளும் முறை குறித்து பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை உடனுக்குடன் தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் அளிப்பதுடன், சமூக இணைய தளங்களில் பதிவேற்றம் செய்து பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டு வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் அஷுடோஷ் கூறும்போது, “பாரதிய ஜனதா கட்சியினர் வாக்களர்களுக்கு பணம், மது மற்றும் அசைவ உணவை லஞ்சமாக வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சில பகுதிகளில் வாக்காளர்களை மிரட்டுவதுடன், வாக்காளர்கள் அட்டைகளை பறித்து வருவதாகவும் கூறப்படுகிறது” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.எல்.வி.நரசிம்மன் கூறும்போது, “ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது.

இக்கட்சியைச் சேர்ந்தவர்கள் வாக் காளர்களுக்கு லஞ்சம் வழங்குவதற் காக சேர்த்து வைத்திருந்த மது பாட்டில் கள் போலீஸாரிடம் சிக்கியுள்ளன. ஆனால் இவர்கள் தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகள் மீது புகார் கூறி வருகிறார்கள்” என்றார்.

ஆம் ஆத்மிக்கு மம்தா ஆதரவு

கொல்கத்தா

டெல்லி தேர்தல் நெருங்கும் வேளையில், ஆம் ஆத்மி கட்சிக்கு தனது ஆதரவுகளை மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வரும் 7ம் தேதி டெல்லி தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லிவாசிகள் அனைவருக் கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அனைவரும் உங்கள் வாக்குகளை ஆம் ஆத்மிக்கு அளிக்க வேண்டும். டெல்லியின் வளர்ச்சிக்காக நீங்கள் ஆம் ஆத்மியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

சமீபகாலமாக திரிணமூல் காங்கிரஸ் மத்திய அரசுடன் நேருக்கு நேர் மோதி வருவது குறிப்பிடத்தக்கது. அந்தப் பின்னணியில்தான் மம்தா தனது ஆதரவை ஆம் ஆத்மிக்கு அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x