

நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த தலை வர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தகவல் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை காலை அமித் ஷா மற்றும் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பின் தலைவர் அனுராக் தாக்கூர் ஆகியோர் முன்பு பா.ஜ.க.வில் இணைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
லுஃப்தான்சா நிறுவனத்தின் பர்வேஸ் அலம்கிர் கான், கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஹென்றி மோசஸ், ஏ.டி. அண்ட் டி., நிறுவனத்தின் நீதா அகர்வால், அய்க்கான் குழுமத்தின் ஜக்பிரீத் லம்பா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளதாக அக்கட்சி வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமித் ஷா கூறும்போது, "இவர்கள் அனைவரும் கட்சியில் இணைய வில்லை. மாறாக, ஒரு குடும்பத்தில் இணைந்திருக்கிறார்கள்’’ என்றார்.