

பாட்னாவில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி பேசியதாவது:
ஏழைகளின் நலனுக்காக நான் செயல்பட்டேன். அதற்காக என்னை பதவி விலகச் சொன்னார்கள். நான சாக தயாராக இருக்கிறேன். ஆனால் யாருக்காகவும் தலைகுனிய மாட்டேன்.
நான் செய்தது தவறு இல்லை என்று நீங்கள் கருதினால், நம்பிக்கை வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவு அளிக்குமாறு உங்கள் எம்எல்ஏக்களிடம் கூறுங்கள். அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதற்காக எனக்கு எதிராக அவர்கள் வாக்களிக்க முடிவு செய்திருந்தால், என்னிடமும் அமைச்சர் பதவி காலியாக இருக்கிறது என்று அவர்களிடம் கூறுங்கள். எனக்கு ஆதரவாக வாக்களித்தால் அவர்களை நான் அமைச்சராக்குவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.