தியானத்தின் மூலம் பலாத்காரங்களை கட்டுப்படுத்தலாம்: முரளி மனோகர் ஜோஷி

தியானத்தின் மூலம் பலாத்காரங்களை கட்டுப்படுத்தலாம்: முரளி மனோகர் ஜோஷி
Updated on
1 min read

தியானம் செய்வதை தினசரி நடவடிக்கையாக ஒவ்வொருவரும் கொண்டால், நாட்டில் நடக்கும் பலாத்காரச் சம்பவங்களை நிச்சயம் தடுக்ககாம் என்று முரளி மனோகர் ஜோஷி கூறினார்.

இது குறித்து பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறும்போது, "முகமது நபிகள் சிறந்த தியான யோகியாக திகழ்கிறார். இஸ்லாமியர்கள் தினசரி 5 முறை தியானம் செய்கின்றனர்.

தியானத்தின் மூலம் பல நன்மைகள் உள்ளது. தியானம் செய்வதை அனைவரும் தினசரி நடவடிக்கையாக செய்தால், பலாத்கார வழக்குகள் குவிவதை தடுக்கலாம். இதனால் பலாத்காரச் சம்பவங்கள் முற்றிலும் குறையும் என்று நான் கூறவில்லை. ஆனால் நிச்சயம் குறையும்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாழ்க்கையில் புதிய வழியை தியானம் ஏற்படுத்தும். நமது உடல் நிலையை உணரச் செய்யும். நமது கவனம் உரிய இடத்தில் இருக்கும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in