

கேரளத்தில் போதைப்பொருள் வைத்திருந்ததாக மலையாள நடிகர் மற்றும் 4 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பான ரகசிய தகவலின் பேரில், கொச்சி நகரின் கடவந்தரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் போலீஸார் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் அங்கிருந்த 10 கிராம் கோகைன் போதைப்பொருளை போலீஸார் கைப்பற்றினர். மேலும் போதைப்பொருள் வைத்திருந்ததாக மலையாள நடிகர் ஷினே டாம் சாக்கோ, பெண் உதவி இயக்குநர் பிலெஸ்ஸி மற்றும் மாடலிங் இளம்பெண்கள் மூவரை கைது செய்தனர்.
இவர்களின் வாக்குமூலத்தை போலீஸார் நேற்று பதிவு செய்தனர். கோவாவில் இருந்து இந்த போதைப்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினர்.