

மத்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் தலைமை யில், இந்திய அதிகாரிகள் குழு வினர் சார்க் நாடுகளுக்கு பயணம் செல்கின்றனர். இந்தப் பயணம் மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து மத்திய வெளி யுறவுத் துறை செய்தித் தொடர் பாளர் நேற்று கூறியதாவது:
தெற்காசிய நாடுகளுடனான (சார்க்) உறவை பலப்படுத்த, பிரதமர் நரேந்திர மோடி உத்தர விட்டுள்ளார். அதன்படி, வெளியுற வுத் துறை செயலர் எஸ்.ஜெய் சங்கர் தலைமையில் அதிகாரிகள் குழு மார்ச் 1-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை பயணம் தொடங்குகிறது.
முதல் கட்டமாக மார்ச் 1-ம் தேதி பூடான் செல்கின்றனர். அடுத்த நாள் வங்கதேசம் செல்கின்றனர். மார்ச் 3-ம் தேதி ஜெய்சங்கர் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் செல் கின்றனர். 4-ம் தேதி ஆப்கானிஸ் தான் செல்கின்றனர்.
மற்ற சார்க் நாடுகளுக்கான பயணத் திட்டம் குறித்து அந்தந்த நாட்டு தூதரக அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். தேதி முடிவான வுடன் அறிவிக்கப்படும்.
நேபாளத்தில் நடந்த சார்க் மாநாட்டில் பிரதமர் மோடி பங் கேற்றார் . அப்போது, சார்க் நாடு களுக்கென செயற்கைக் கோள், பிராந்திய பல்கலைக்கழகம் ஏற் படுத்துவது தொடர்பாக யோசனை கள் தெரிவித்திருந்தார்.
இந்த விஷயங்கள் குறித்தும் ஜெய்சங்கர் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
டெல்லியில் உள்ள இந்தியாவுக் கான பாகிஸ்தான் தூதர், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் சென்றார். அங்கு காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், அப்போது நடக்க இருந்த இந்திய - பாகிஸ்தான் வெளியுற வுத் துறை செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்தது. அதன்பின் இப்போதுதான் வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்கிறார்.
ஜம்மு காஷ்மீர் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண, சிம்லாவில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மேற் கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி செயல்பட அரசு தயாராக இருக்கிறது. சிம்லா ஒப்பந்தப்படி எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தலாம்.
ஏற்கெனவே இந்த மாத தொடக்கத்தில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது வெளியுறவுத் துறை செயலரின் பாகிஸ்தான் பயணம் குறித்து கூறியிருந்தார். அதை நவாஸும் வரவேற்றிருந்தார்.
இவ்வாறு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கடந்த இரண்டரை ஆண்டு களுக்கு முன்பு அப்போதைய வெளியுறவுத் துறை செயலர் ரஞ்சன் மத்தாய் இஸ்லாமாபாத் பயணம் மேற்கொண்டு பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதன்பின் இந்திய வெளி யுறவுத் துறை செயலர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது.