Last Updated : 14 Feb, 2015 10:49 AM

 

Published : 14 Feb 2015 10:49 AM
Last Updated : 14 Feb 2015 10:49 AM

எம்.எஸ்.ஜி. சர்ச்சை திரைப்படம் வெளியானது: ஹரியாணா, சண்டிகரில் பலத்த பாதுகாப்பு

பலத்த பாதுகாப்புகளுக்கு இடையில், ஹரியாணா மற்றும் சண்டிகர் உட்பட நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரம் திரையரங்குகளில் 'எம்.எஸ்.ஜி' திரைப்படம் நேற்று வெளியானது.

`டேரா சச்சா சவுதா' எனும் அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹீம் சிங். இவர் ஓர் ஆன்மிகவாதியாகக் கருதப்படுகிறார்.

இவர் `மெஸஞ்சர் ஆஃப் காட்' எனும் தலைப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கி, பாடல் எழுதி, நடித்துள்ளார்.

அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடன் அது படத்தணிக்கைக் குழுவுக்கு வந்தது. ஆனால் அந்தப் படத்துக்கு அக்குழு அனுமதி வழங்கவில்லை. இருந்தும் நீண்ட முயற்சிக்குப் பிறகு அந்தப் படத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.

தற்போது அந்தத் திரைப்படம் `எம்.எஸ்.ஜி.- தி மெஸஞ்சர்' எனும் தலைப்பில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை பஞ்சாப் மாநிலம் தடை செய்துள்ளது.

எனினும், ஹரியாணா மற்றும் சண்டிகர் பகுதிகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் திரையிடப்பட்டுள்ள பகுதிகளில் எந்த ஓர் அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க, காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தவிர, பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறக்கப்பிட்டுள்ளது.

ஜனவரி மாதம் 16ம் தேதியே படம் திரைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அப்போது பல்வேறு அமைப்பினரும் அந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

சமீபகாலமாக, குர்மீத் ராம் ரஹூம் சிங்குக்கும், சீக்கிய மதத்தினருக்கும் இடையில் சுமுகமான உறவு இல்லை. ஆகவேதான் இந்தப் படத்துக்கு மேற்கண்ட பகுதிகளில் தடை கோரப்பட்டது என்று தகவல்கள் கூறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x