

தெலங்கானா மாநிலத்தில் கடந்த 42 நாட்களில் பன்றி காய்ச்சல் நோய்க்கு 47 பேர் உயிரிழந்துள்ள னர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலத்தில் 2,778 பேர் ரத்த பரிசோதனை செய்து கொண்டதில், 917 பேருக்கு பன்றி காய்ச்சல் நோய் இருப்பது தெரிய வந்தது. இதில் கடந்த புதன் கிழமை வரை 42 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மேலும் 5 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம், செகெந்திரா பாத் காந்தி அரசு மருத்துவமனை யில் ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனைகளில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். தற்போது, காந்தி மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட 21 பேரும், சந்தேகத்தின் பேரில் மேலும் 23 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஃபீவர் மருத்துவமனையில் 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் உஸ்மானியா அரசு மருத்துவமனை, கேர், அப்போல்லோ, யசோதா, க்ளோபல், கிம்ஸ் ஆகிய மருத்துவமனைகளிலும் தொடர்ந்து பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்