Last Updated : 28 Feb, 2015 06:35 PM

 

Published : 28 Feb 2015 06:35 PM
Last Updated : 28 Feb 2015 06:35 PM

பட்ஜெட் எதிரொலி: விலை உயர்பவையும் குறைபவையும்

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த அருண் ஜேட்லி, நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் நடவடிக்கை கொஞ்சம் மந்தமானாலும் முதலீட்டை பெருக்கும் பட்ஜெட்டாக இது அமையும் என்றார்.

2016, ஏப்ரலில் சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இதன்மூலம் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் வரிகள் ஒருமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், தற்போது இருக்கும் சேவை வரியை உயர்த்தி இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வந்துள்ளது. இதன் எதிரொலி...

விலை அதிகரிப்பவை:

* குளிர்சாதனப் பெட்டிகள் (ஏசி)

* குளிர்பதனப் பெட்டிகள் (ஃபிரிட்ஜ்)

* முழுதும் கட்டுமானம் செய்யப்பட்ட இறக்குமதி வணிக வாகனங்கள்

* சிமெண்ட்

* குளிர்பானங்கள் மற்றும் மினரல் வாட்டர்

* பிளாஸ்டிக் பைகள்

* கேளிக்கைப் பூங்காக்கள் மற்றும் தீம் பார்க்குகள்

* மதுபானம்

* சிகரெட், பான்மசாலா

* மருத்துவச் செலவுகள்

* கூரியர் சேவை செலவுகள்

* உணவக செலவுக

* உடற்பயிற்சி நிலைய செலவுகள்

* சலவைச் செலவுகள்

* அழகு நிலைய செலவுகள்

* கேபிள் டிவி கட்டணம்

* விமானப் பயணம்

* ஏ/சி பேருந்து பயணம்

* அழகுசாதனப் பொருட்கள்

* செல்பேசி கட்டணங்கள்

* மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் சினிமா பார்க்கும் செலவு

* மருந்துகள்

* தகவல் தொழில்நுட்பப் பொருட்கள்

இவை அதிக செலவினங்களைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை குறைபவை:

தோல் காலணிகள் மீதான உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.1000த்திற்கும் மேல் விலையுள்ள தோல் காலணிகளுக்கு உற்பத்தி வரி 12%-லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கொஞ்சம் கூடுதல் விலையுள்ள காலணிகளின் விலை இறங்க வாய்ப்புள்ளது.

உள்ளூரில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள், எல்.இ.டி./எல்.சி.டி. பொருட்கள் (விளக்குகள் உட்பட)

சூரிய ஒளி வாட்டர் ஹீட்டர்கள்

பேஸ்மேக்கர்கள், ஆம்புலன்ஸ் சேவைகள்

டேப்லட் கணினிகள்

அகர்பத்திகள்

மைக்ரோவேவ் அடுப்புகள்

மேலும், மருத்துவக் காப்பீட்டு திட்டங்கள், பிற காப்பீட்டுத் திட்டங்கள் மீதான செலவுகள் குறைய வாய்ப்புள்ளது.

உணவுப்பொருட்களில் பிஸ்கட்கள், பழச்சாறு, பதனிடப்பட்ட உணவுப் பொருட்கள், தங்கம் ஆகியவை விலைகள் குறைய வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x