டெல்லியில் இன்றுடன் பிரச்சாரம் முடிகிறது: பாஜக, ஆம் ஆத்மி கடும் போட்டி

டெல்லியில் இன்றுடன் பிரச்சாரம் முடிகிறது: பாஜக, ஆம் ஆத்மி கடும் போட்டி
Updated on
2 min read

டெல்லியில் பிப்ரவரி 7-ல் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

இதில், பாரதிய ஜனதாகட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே இருமுனைப் போட்டி நிலவுவதாக வதாக கருதப்படுகிறது. தொடர்ந்து 3 முறை ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலிலும் மூன்றாவது இடத்துக்கு தள்ளப் படும் நிலை காணப்படுகிறது.

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 12-ம் தேதி வெளியிட்டது. இதற்கு 2 தினங்களுக்கு முன், முதல் கட்சியாக பாரதிய ஜனதா சார்பில் தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். தொடர்ந்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் சார்பிலும் தொடங்கப்பட்ட தீவிர பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது. இதில், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுவதாகக் கருதப்படுகிறது.

பாஜக கோட்டைவிட்ட 4 தொகுதிகள்

டெல்லியில் கடந்த 2013-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 32 தொகுதிகளை கைப்பற்றி முதலிடம் பிடித்தாலும் அதனால் ஆட்சியமைக்க முடியாமல் போனது.

வெற்றிபெற்ற 32 தொகுதிகள் தவிர, பாஜகவுக்கு மேலும் 30 தொகுதிகளில் இரண்டாவது இடம் கிடைத்தது. எனவே, ஏற்கனவே வென்ற தொகுதிகளை தக்கவைப்பதுடன் இரண்டாமிடம் பெற்ற தொகுதிகளில் 4 தொகுதிகளை பெற்றுவிடுவது என பாஜக திட்டமிட்டுள்ளது.

ஆம் ஆத்மியின் நம்பிக்கை

பாஜகவை அடுத்து 28 இடங்களைப் பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு, 20 தொகுதிகளில் இரண்டாமிடம், 18-ல் மூன்றாமிட மும் கிடைத்தது. இந்த தேர்தலில் தங்களுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என கேஜ்ரிவால் நம்புகிறார்.

கடந்த முறை 49 நாள் ஆட்சியில் லோக் ஆயுக்தா மசோ தாவை நிறைவேற்ற முடியாமல் போனதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே டெல்லிவாசிகள் மீண்டும் தேர்தலை சந்திக்க நேரிட்டது. இது கேஜ்ரிவாலுக்கு ஒரு பின்னடை வாக இருப்பதாகக் கூறப்பட்டா லும், அவரது கட்சியினர் நம்பிக் கையுடன் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருவது நல்ல பலனை அளிக்கும் என கருதப்படு கிறது.

மூன்றாவது இடத்தில் காங்கிரஸ்

டெல்லியில் காங்கிரஸ் 3 முறை ஆட்சி செய்தும், கடந்த தேர்தலில் வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றது. 16 இடங்களில் இரண்டா வதாகவும், 41 தொகுதிகளில் மூன்றாவதாகவும் வந்தது.

32 தொகுதிகளில் 10 முதல் 50 சதவீதம் வரை உள்ள முஸ்லிம்கள், கிழக்கு மற்றும் வடகிழக்கு டெல்லியில் குடிசை மாற்றுப் பகுதி மக்களின் வாக்குகள் கிடைக்காதததே தோல்விக்கு காரணம் என்று காங்கிரஸ் கருதியது.

பிப்ரவரி 7-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்து தேர்தல் முடிவுகள் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும்: தேர்தல் கணிப்புகள் வெளியீடு

டெல்லியில் தனியார் ஆய்வு மையத்துடன் இணைந்து பிரபல இந்தி செய்தி சேனல் ஒன்று கடைசிநேர தேர்தல் கருத்து கணிப்பை நேற்று வெளியிட்டது. இதில் அர்விந்த் கேஜ்ரிவால் அதிகம் பேர் விரும்பும் முதல்வராக இருக்கிறார். ஆம் ஆத்மி கட்சி, மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 34 தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது நிலையில் பாஜகவுக்கு 32 தொகுதிகள் மீண்டும் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் அந்த கணிப்பு தெரிவிக்கிறது. இந்தியா டுடே மற்றும் சிசிரோ அமைப்பின் தேர்தலுக்கு முந்தைய கணிப்பில், ஆம் ஆத்மிக்கு 38 முதல் 46-ம் பாஜகவுக்கு 19 முதல் 25-ம், காங்கிரஸுக்கு வெறும் 3 முதல் 7 தொகுதிளும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in