2025-ல் அமெரிக்காவில் இருந்து 3,155 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்: நாடாளுமன்றத்தில் அரசு தகவல்

2025-ல் அமெரிக்காவில் இருந்து 3,155 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்: நாடாளுமன்றத்தில் அரசு தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: நாடாளு​மன்​றத்​தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வெளி​யுறவு இணை அமைச்​சர் கீர்த்தி வர்​தன் சிங் அளித்த பதில் வரு​மாறு:

சட்​ட​விரோத​மாக அமெரிக்கா​வுக்​குள் நுழைந்​தவர்​கள், விசா காலத்தை தாண்​டி​யும் தங்​கி​யிருப்​பவர்​கள், எந்த ஆவண​மும் இல்​லாமல் வசித்து வரு​வோர் மற்​றும் குற்​றச்​செயல்​களில் தொடர்​புடைய​வர்​களை அமெரிக்கா நாடு கடத்​துகிறது.

2025-ல் நவம்​பர் 21-ம் தேதி நில​வரப்​படி, அமெரிக்​கா​வில் இருந்து 3,155 இந்​தி​யர்​கள் நாடு கடத்​தப்​பட்​டுள்​ளனர். இந்த எண்​ணிக்கை 2024-ல் 1,368, 2023-ல் 617 ஆக இருந்​தது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

மற்​றொரு கேள்விக்கு அமைச்​சர் அளித்த பதிலில், “2025, அக்​டோபர் 31-ம் தேதி நில​வரப்​படி குவைத் சிறை​களில் 316 இந்​திய கைதி​கள் உள்​ளனர்” என்​றார்.

மத்​திய ஹஜ் கமிட்​டி​யின் கீழ் கடந்த சில ஆண்​டு​களில் இந்​தி​யா​வில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் சென்​றவர்​கள் எண்​ணிக்​கையை அமைச்​சர் பகிர்ந்து கொண்​டார். “நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து 2024-ல் 1,39.964 பேர், 2023-ல் 1,39,429 பேர், 2022-ல் 56,634 பேர் ஹஜ் புனிதப் பயணம் சென்​றனர்’’ என்​றார்.

2025-ம் நிதி​யாண்டில் வெளி​நாடு​களில் 5 தூதரகங்​கள் திறக்​கப்​பட்​டன. ஈக்​வெ​டாரில் குயிட்​டோ, அமெரிக்​கா​வில் பாஸ்​டன், லாஸ் ஏஞ்​சல்​ஸ், ரஷ்​யா​வில் கசான், யெகாடெரின்​பர்க் ஆகிய நகரங்​களில் இவை திறக்​கப்​பட்​ட​தாக அமைச்​சர் கீர்த்​தி வர்​தன்​ சிங்​ கூறி​னார்​.

2025-ல் அமெரிக்காவில் இருந்து 3,155 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்: நாடாளுமன்றத்தில் அரசு தகவல்
உள்நாட்டு விமானங்களுக்கு ரூ.7,500 முதல் ரூ.18,000 வரை மட்டுமே வசூலிக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in