

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் சிமன்லால் மோடி, புண்ணியதல யாத்திரை கிளம்பினார்.
இது குறித்து அவரது சகோதர ரான அசோக் சிமன்லால் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘பல மாதங்களாக தனது கண வர், பிரதமராக வேண்டும் என விரதம் இருந்து வருகிறார். இதற்காக அவர் இந்தப் பகுதியின் பெண் களுடன் சேர்ந்து புனித யாத்திரை கிளம்பியிருக்கிறார்’ என்றார்.
குஜராத்தின் உன்ஜாவில் மளிகை கடை வைத்துள்ள மற் றொரு சகோதரரான கமலேஷ் மோடி கூறுகையில், ‘பல வருடங் களாக அவர் செய்த பூஜைகளுக்கு பலன் அளிக்கும் வகையில், மோடியே யாசோதாவை தன் மனைவி என வெளிப்படையாக அறிவித்துள்ளார். இது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக் கிறது. சுமார் 45 வருடங்களுக்கு முன் மோடி, ஆர்.எஸ்.எஸ் தொண் டுக்காக தம் குடும்பத்தை விட்டு சென்ற பின் வேறுயாரையும் திருமணம் செய்ய யசோதா விரும்பியதில்லை என்றார்.
தேர்தல் பிரமாண பத்திரத்தில் தன்னை மணமானவர் என மோடி கூறிய பின் பலரது பார்வையும் அவரது மனைவியான 62 வயது யசோதா பென் மீது பதிந்துள் ளது. இதனால், அவர்கள் கண் காணிப்பில் இருந்து தப்பிக்க யசோதா பென், புனித யாத்திரைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகக் கருதப் படுகிறது.
அவர் செல்லவுள்ள நான்கு புண்ணியதலங்களில் முக்கியமான தலமான பத்ரிநாத், மே மாதம் 5 ஆம் தேதி திறக்கப் பட உள்ளது. இதற்கு முந்தைய தேதியில் கேதர்நாத்தும், யமுனோத் திரி மற்றும் கங்கோத்திரி மே 2-லும் திறக்கப்பட உள்ளதாக உத்தரகண்ட் அரசு கடந்த மாதம் அறிவித்திருந்தது.
உத்தரகண்டில் வந்த இயற்கை சீரழிவினால், நான்கு புண்ணியதலங்களின் பாதை களும் மோசமான நிலையில் பழுதடைந்துள்ளதாகக் கூறப்படு கிறது. இந்த சூழலில் யசோதா, நான்கு புண்ணியதல யாத்திரைகள் சென்றிருப்பதாகக் கூறுவது நம்ப முடியாததாக இருப்பதாகக் கருதப்படுகிறது.
தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்டவராகக் கருதப்படும் யசோதா, கடந்த நான்கு மாதங் களாக தன் கணவர் பிரதமராக வேண்டி செருப்பு அணிவதை விட்டு விட்டாராம். இவர், குஜரத்தின் தலைநகரில் இருந்து சுமார் 80 கி.மீ தொலையில் உள்ள பனஸ்கந்தா மாவட்டத்தின் உன்ஜா கிராமத்தில், தனது இரு சகோதரர்களுடன் வாழ்ந்து வாழ்கிறார்
இது, மோடியின் சொந்த கிராமமான வத்நகரில் இருந்து 32 கி.மீ தொலைவில் உள்ளது. 1968-ல் மோடி மணமுடித்த போது யசோதா ஏழாம் வகுப்பு பயின்று கொண்டிருந்ததாகவும், தம் படிப்பை தொடருவதற்காக மணமான சில நாட்களில் அவரது தந்தையிடம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படு கிறது. ஆனால், படிப்பிற்காகச் சென்றவரை மோடி திரும்ப அழைக்கவில்லை.