டெல்லியில் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து: 3 பேர் பலி; 8 பேர் படுகாயம்

டெல்லியில் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து: 3 பேர் பலி; 8 பேர் படுகாயம்

Published on

டெல்லியில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் உடல் கருகி பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்தனர்.

மேற்கு டெல்லி பாலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை 4.20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 2 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைத்தனர்.

இது குறித்து தீயணைப்பு அதிகாரி கூறும்போது, "பாலம் பகுதி சாத் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தீன் தயாள் உபாதயா மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான கட்டடத்தில் 6 குடித்தனம் இருந்துள்ளது" என்றார்.

இறந்தவர்கள் விபரம் பின்வருமாறு: அக்‌ஷய் (1), ஜகதீஷ் (32). 20 வயது மதிக்கத்தக்க மூன்றாவது நபர் அடையாளம் காணப்படவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in