எல்லையில் 1,161 ஊடுருவல் சம்பவங்கள் நடந்துள்ளன: கிரண் ரிஜ்ஜு

எல்லையில் 1,161 ஊடுருவல் சம்பவங்கள் நடந்துள்ளன: கிரண் ரிஜ்ஜு
Updated on
1 min read

உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜு: 2013-ம் ஆண்டு இந்திய-வங்கதேச எல்லையில் 1,161 ஊடுருவல் சம்பவங்களும், இந்திய- பாகிஸ்தான் எல்லையில் 345 ஊடுருவல் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

2014-ம் ஆண்டு இந்திய வங்கதேச எல்லையில் 1,018 ஊடுருவல் சம்பவங்களும், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் 268 சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் வங்கதேச எல்லையில் 86 சம்பவங்களும், பாகிஸ்தான் எல்லையில் 4 சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இரு எல்லைகளிலும் ஊடுருவலைத் தடுக்க ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in