இளைஞர்களுக்காக விரைவில் தேசிய திறன் இயக்கம்

இளைஞர்களுக்காக விரைவில் தேசிய திறன் இயக்கம்
Updated on
1 min read

மத்திய அரசு விரைவில் தேசிய திறன் இயக்கத்தை துவக்க உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

மக்களவையில் 2015-16 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த உரையாற்றிய அவர், "தேசிய திறன் இயக்கம் மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் தொடங்கப்படும்.

இந்த இயக்கம் பல்வேறு அமைச்சகங்கள் எடுத்துவரும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும். இதன் மூலம் 31 துறைகளில் உள்ள திறன் மேம்பாட்டு மன்றங்களின் பலன்களின் தரத்தை அரசு உயர்த்த முடியும்.

உலகின் இளமையான நாடுகளில் இந்தியா ஒரு பெரும் இடத்தை பிடித்துள்ளது. நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 54 சதவீதம் பேர் 25 வயதிற்கு உட்பட்டவர்கள்.

இருப்பினும், இன்றளவும் நாட்டின் தொழிலாளர்களில் ஐந்து சதவிதத்தினர் மட்டுமே முறையான திறன் பயிற்சி பெற்றுள்ளனர். முறையான தொழில் பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே தொழிலில் நிலைத்து நிற்க முடியும். தேசிய திறன் இயக்கத்தின் மூலமாக இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும்" என்றார் அருண் ஜேட்லி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in