

நிலம் கையகப்படுத்துதல் தொடர் பான புதிய மசோதாவை எதிர்க் கட்சிகள் எதிர்ப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா நேற்று கூறியதாவது:
நிலம் கையகப்படுத்துதல் புதிய மசோதா குறித்து எதிர்க்கட்சி களுக்கு கருத்து வேறுபாடு இருந்தால் அதுகுறித்து விவாதம் நடத்த முன்வர வேண்டும். விவசாயிகளின் நலனை மத்திய அரசு ஒருபோதும் புறக்கணிக் காது. எனவே ஆக்கப்பூர்வமான யோசனைகளை தெரிவித்தால் அதை சட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழிற்சாலைகளை அதிக அளவில் உருவாக்கவும் விவ சாயிகளின் விளைபொருளுக்கு கூடுதல் விலை கொடுக்கவும் மத்திய அரசு விரும்புகிறது. வளர்ச்சிப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும்போது, சந்தை விலையைப் போல 4 மடங்கு இழப்பீடு வழங்க புதிய மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.