ஆந்திராவில் இரண்டு பால்ய திருமணங்கள் நிறுத்தம்

ஆந்திராவில் இரண்டு பால்ய திருமணங்கள் நிறுத்தம்
Updated on
1 min read

ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பாலமேனரில் தாய்தந்தையற்ற 14 வயதுள்ள சிறுமியை அவளது உறவினர்கள் கூடி 25 வயது இளைஞருக்கு வெள்ளியன்று மணம்முடிக்க திட்டமிட்டிருந்தனர். அதே ஊரில் உள்ள கோவிலில் திருமண விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதைக் கேள்விப்பட்ட வறுமை ஒழிப்பு சேவைக்கான ஊரக அமைப்பு(ROPES) மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள்(ICDS) ஆகிய இரு தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாகவே கோவிலுக்குச் சென்று திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர்.

அதேபோல இன்னொரு நிகழ்வாக, சித்தூர் மாவட்டம் பேரடிப்பள்ளி மண்டலத்தில் 13 வயது சிறுமியை தமிழகத்தின் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கு திருமணம் செய்யப்பட இருந்த நிகழ்ச்சியும் தடுத்து நிறுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி இளைஞருக்கு சிறுமியை திருமணம் செய்துகொடுக்க ஏற்கெனவே நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் கிருஷ்ணகிரியில் ஞாயிறு அன்று நடைபெற இருந்த திருமண நிகழ்ச்சிக்கு புறப்படுவதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாய் இருந்தனர்.

அப்போது தி ரோப்ஸ் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் குழுவைச் சேர்ந்தவர்கள் பேரடிப்பள்ளிக்கு விரைந்து சென்று அவர்களது திட்டத்தை முறியடித்தனர்.

இவ்விரண்டு வழக்குகளிலும் 18 வயது பூர்த்தியாவதற்கு முன்னமேயே சிறுமிகளை திருமணத்தில் ஈடுபடுத்த முயன்றவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. பின்னர் அவர்கள் உள்ளூர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in