Last Updated : 02 Apr, 2014 11:40 AM

 

Published : 02 Apr 2014 11:40 AM
Last Updated : 02 Apr 2014 11:40 AM

ஓட்டுக்கு பணம் பழைய ஸ்டைல்... மட்டன், சிக்கன் புது ஸ்டைல்

தேர்தல் நேரத்தில் பணம் எடுத்து செல்வதற்கும், அதனை வாக் காளர்களிடம் அளிப்பதற்கும் தேர் தல் ஆணையம் பெருமளவில் முட்டுக்கட்டைகளை போட்டிருக் கிறது.

இதனால் மட்டன், சிக்கன், மீன், மதுபான வகைகள், மளிகைப் பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுத்து புதிய பாணியில் வாக்குகளைப் பெற கர்நாடக அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர்.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் கர்நாடகம் முழுவதும் நேற்று கன்னட புத்தாண்டான ‘யுகாதி' கோலாகலமாக‌ கொண் டாடப்பட்டது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ‘யுகாதி'யை சிறப்பாக கொண்டாட‌, அனைத்துவிதமான செலவினங்களையும் அரசியல் கட்சிகள் போட்டிபோட்டு கொண்டு செய்தன. கோயில் பிரார்த்தனையில் ஆரம்பித்து சமூக நலக்கூடங்கள், வீடு வரை பல்வேறு வகைகளில் பணப் பட்டுவாடா அரங்கேறியது.

கோலார் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் கெடுபிடி நீடித்ததால் அனைத்தையும் மிஞ்சும்விதமாக ஆடு, கோழி, மளிகைப் பொருட்கள் அடங்கிய பை, மதுபான கடைகளில் இலவச மதுபானங்கள் வழங்கி அரசியல்வாதிகள் வாக்கு வேட்டையாடினர்.

கோலார் தொகுதியில் தொ டர்ந்து 8-வது முறையாக மத்திய அமைச்சர் கே.ஹெச்.முனியப்பா காங்கிரஸ் சார்பாக மீண்டும் போட்டியிடுகிறார். இம்முறை பலத்த போட்டி நிலவுவதால் அவர் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைக்கிறார். அதிலும் குறிப்பாக யுகாதியை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பல்வேறுவிதமான பரிசுப் பொருட் களை வழங்கியுள்ளார்.

இதற்காக சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிறு, திங்கள்கிழமை முழு வதும் வாக்காளர்களுக்கு ‘யுகாதி' பரிசுப் பொருட்கள் வழங்குவது அமோகமாக நடைபெற்றது.

கர்நாடகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஆட்டுக்குட்டிகள் கோலாருக்கு கொண்டு வரப்பட்டன. அங் கிருந்து இரவோடு இர வாக அக்கம்பக்கத்து கிராமங் களுக்கு கொண்டு செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிகள் வாக்காளர் களுக்கு வழங்கப்பட்டன.

மேலும் சில கிராமங்களில் சிக்கன், மட்டன் கடைகளில் வாக்காளர் அடையாள அட்டையைக் காட்டினால், தலா 1 கிலோ இறைச்சி வழங்கப்பட்டது. மேலும் சில இடங்களில் மளிகை கடைகளில் 5 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை, 2 லிட்டர் எண்ணெய் உள்ளிட்டவை அடங்கிய பரிசு பைகள் வழங்கப்பட்டன.

இதுமட்டுமில்லாமல் மதுபான பிரியர்களை கவனிக்கும் விதமாக, சில மதுபான கடைகளில் டோக்கன் மூலம் இலவச மது பானம் வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது.

கோலார் மட்டுமில்லாமல் கர்நாடகத்தின் பல இடங்களில் யுகாதியை முன்னிட்டு வாக்காளர் களுக்கு விதவிதமாக பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பெங்களூரில் பல்வேறு இடங் களில் காவல்துறையின் சோதனை சாவடிகளுக்கு மிக அருகிலேயே வாக்காளர்களுக்கு கோழிகள் வழங்கியதை பார்க்க முடிந்தது.

வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதில் காங்கிரஸ், பா.ஜ.க., ம.ஜ.த. உள்ளிட்ட கட்சிகள் போட்டிபோட்டு செயல் படுவதால் யார் மீதும், எவ்வித புகாரும் தேர்தல் ஆணையத்தில் பதிவாகவில்லை.

சில கிராமங்களில் வாக்காளர் அடையாள அட்டையைக் காட்டினால், தலா 1 கிலோ இறைச்சி வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x