Published : 11 Feb 2015 07:27 PM
Last Updated : 11 Feb 2015 07:27 PM

நன்கொடை விவகாரம்: ஆம் ஆத்மிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

''நேர்மையற்றவை'' என குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகளை பெற்றதாக காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விசாரணை செயல்பாடுகள் முழுமை அடைவதற்கு ஏதுவாக நன்கொடையாளர்கள் பற்றிய விவரங்களை தருமாறு அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருமானவரித்துறையின் செய்தித் தொடர்பாளர் ரேகா ஷுல்கா கூறியதாவது:

இந்த நோட்டீஸ்களை டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதற்கு முன்னதாக செவ்வாய் அன்று வழங்கப்பட்டது. வருமான வரித் துறையின் சமீபத்தில் தொடங்கியுள்ள முதல்கட்ட விசாரணையின் வாயிலாக, காசோலைகளை வழங்கிய நிறுவனங்கள் "சட்டவிரோத பணத்தை முறையான பணமாக மாற்றும் காரிய தரகர்களாக செயல்பட்டுள்ளார்கள்" என்பது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற விசாரணையில் கணக்கில் வராத பணம் கணிசமாகக் கண்டறியப்பட்டது. இத்தகைய வழக்குகளில். கணக்கில் வராத இந்த வருமானத் தொகைகள் முறையான பணமாக மாற்றுவதற்கு நேர்மையற்ற நிறுவனங்கள் காரியத் தரகர்களாக செயல்பட்டு உதவியுள்ளன. இதேபோன்று, ஊடகவியலாளர்களின் செய்திகளின் அடிப்படையில் டெல்லியிலும் நேர்மையற்ற நிறுவனங்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனங்கள் காசோலைகளை வழங்கியதை விசாரணைக்குட் படுத்தினோம். வங்கிகளும் கம்பெனி விவகாரத் துறை அமைச்சகமும் தந்துள்ள முகவரிகளில் குறிப்பிட்டுள்ளபடி சென்று தேடிப்பார்த்தபோது குற்றஞ்சாட்டப்பட்ட இந்த நிறுவனங்களோ அதன் இயக்குநர்களோ குறிப்பிட்ட விலாசத்தில் இருப்பதற்கான அடையாளம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்ததில் பெரும் பணம் இடைத்தரகர்களின் மூலமாக பல்வேறு நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பிரித்தளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பான கணக்கு வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்பதும் கண்டறியப்பட்டது. விசாரணை நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதற்காக 50 நபர்களுக்கும் சில நிறுவனங்களுக்கும் இரண்டு கட்சிகளுக்கும் பிப்ரவரி 9 அன்று நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி தேர்தல் நடந்துகொண்டிருக்கும்போது, ஆம் ஆத்மியிலிருந்து விலகிய தொண்டர்குழு ஒன்று ஆம் ஆத்மி கட்சி நான்கு முகவரியற்ற நிறுவனங்களிடமிருந்து ரூ.50 லட்ச ரூபாய் பணம் நன்கொடையாக பெற்றுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இவ்வாறு வருமானவரித்துறை செய்தித் தொடர்பாளர் ரேகா ஷுல்கா தெரிவித்துள்ளார்.

வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் கட்சி பெற்றுள்ள நன்கொடை விவரங்கள் அனைத்தும் இணைய தளங்களில் வெளியிட்டுள்ளோம். அதே சமயம் நன்கொடை பெற்றது தொடர்பான இந்த விசாரணையை அனைத்துக் கட்சிகளிடத்திலும் மேற்கொண்டால் நன்றாயிருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x