தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்ய தடை: மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்ய தடை: மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்
Updated on
1 min read

தீவிரவாதத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக் கைகளை தொலைக்காட்சி சேனல் களில் நேரடி ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி வந்து மும்பையில் தாக்குதல் நடத்தினர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை காட்சிகளை செய்தி தொலைக் காட்சி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன.

இதையடுத்து, வரும் காலத்தில் இதுபோன்ற தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வதைத் தடுக்க கேபிள் டிவி விதிமுறைகளில் திருத் தம் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம், செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி இருந்தது.

தீவிரவாதிகளுக்கு எதிரான நட வடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதால், பாதுகாப்புப் படை யினரின் செயல்பாடுகள் குறித்த ரகசியம் பாதிக்கப்படுகிறது. அத்துடன் பாதுகாப்புப் படையினர், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், தீவிரவாதத் துக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் தீவிரவாத தடுப்பு நட வடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்திருந்தது.

இதற்கு உள்துறை அமைச்சகம் அளித்த விளக்கம் வருமாறு: தீவிரவாதத்துக்கு எதிரான நட வடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதன் மூலம், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மற் றும் பிணைக் கைதிகளாக உள்ள அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும்.

மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியில் சாலை கள், பாலங்கள், பள்ளிக்கூடங்கள், சுகாதார மையங்களை கட்டுதல் மற்றும் தொலைத்தொடர்பு வச தியை மேம்படுத்துதல் ஆகியவை தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் ஆகும். எனவே, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in